உ.பி. தேர்தல்: காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவும் மாா்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. 

இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

காங்கிரஸ் கட்சி, 50 பெண்கள் உள்பட 125 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 40 பேர் இடம்பெற்றுள்ளனர். 16 பேர் பெண்கள். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களில் 40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

கடந்த 2017ல் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீசாரால் தாக்கப்பட்ட ஆஷா பணியாளர். சமூக ஆர்வலர், பஞ்சாயத்து தேர்தலின்போது தாக்கப்பட்ட சமாஜவாதி தலைவர் ஆகிய பெண்கள்  காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com