உத்தரகண்ட்: காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை முடிவு

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு, நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாகக் கூடுகிறது.
ஹரக் சிங் ராவத்
ஹரக் சிங் ராவத்


உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு, நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாகக் கூடுகிறது.

உத்தரகண்டிலுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான 59 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு நாளை கூடுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளுள் 57 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது.

முன்னதாக:

2016-இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவிலிருந்து இணைந்த 10 எம்எல்ஏ-க்களில் ஒருவரான ஹரக் சிங் ராவத், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புகிறார். ஆனால், உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவருமான ஹரீஷ் ராவத்துக்கு அவரை மீண்டும் கட்சியில் இணைப்பதில் விருப்பம் இல்லை எனத் தெரிகிறது.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஹரீஷ் ராவத் நேற்று கூறுகையில், "எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது பற்றி காங்கிரஸ் உயர்நிலைக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். கட்சி எந்த முடிவை எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அவரை மீண்டும் கட்சியில் இணைக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் இடத்தில் நான் இல்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com