உத்தரகண்ட் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பிரகலாத் ஜோஷி
செய்தியாளர் சந்திப்பில் பிரகலாத் ஜோஷி


உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.

உத்தரகண்டிலுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் 59 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக பொதுச்செயலர் அருண் சிங் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கடிமா தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக மாநிலத் தலைவர் மதன் கௌசிக் ஹரித்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் மதன் கௌசிக் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

10 எம்எல்ஏ-க்களுக்கு இடம் மறுக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

59 வேட்பாளர்களில் 31 வேட்பாளர்கள் பட்டதாரிகள், 18 பேர் முதுநிலை பட்டதாரிகள், 4 பேர் ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அரசு உத்தரகண்டை புதிய உச்சத்துக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என அருண் சிங் கூறினார்.

மீதமுள்ள 11 இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com