தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மக்கள் மனுக்களை அளிப்பதற்கு, மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், அவர்களது மனுக்களை அந்தப் பெட்டியில் இட்டுச் செல்லலாம். அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு புகார் பெட்டி நிறைந்தவுடன், அவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்தப் பெட்டியில் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Following the implementation of the Election Code of Conduct, a petition box has been set up for people to submit petitions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி வைப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


