பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாபில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதையும் படிக்க | இந்தியாவிற்கு எதிரான 35 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை அறிவித்தது. 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், “பாஜகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் விவசாய குடும்பப் பின்னணி கொண்ட 12 பேருக்கும், பட்டியலினத்தை சேர்ந்த 8 பேருக்கும், சீக்கியர்கள் 13 பேருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | காஷ்மீரில் அடுத்த 64 மணி நேரத்துக்கு முழு ஊரடங்கு
மேலும் பாஜக வேட்பாளர்களில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரிகள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


