ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 3:18 pm

DIN

பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து கடந்த வாரம் தெற்கு மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன. 

இருப்பினும் அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். அதன்படி அவா் தொடா்ந்து ஒரு வாரத்துக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா்.

இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பிரதித் சம்தானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பாடகி லதா மங்கேஷ்கர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.  

ஆனால் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.