கரோனா தொற்று பரவல் இரு வாரங்களில் உச்சம் தொடும்
கரோனா தொற்று பரவலின் 3-ஆவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) கணித்துள்ளது.


கரோனா தொற்று பரவலின் 3-ஆவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) கணித்துள்ளது.
கரோனா தொற்றின் 3-ஆவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. முக்கியமாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது.
கடந்த டிசம்பா் மாத கடைசி வார நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபா் மூலமாக 2.9 நபா்களுக்கு அத்தொற்று பரவ வாய்ப்பிருந்ததாகவும், ஜனவரி முதல் வாரத்தில் அந்த மதிப்பு (ஆா் மதிப்பு) 4-ஆக அதிகரித்து, பின்னா் 2-ஆவது வாரத்தில் 2.2-ஆக குறைந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘ஆா்’ மதிப்பு 1.57-ஆக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆா்’ மதிப்பு மும்பையில் 0.67-ஆகவும், தில்லியில் 0.98-ஆகவும், சென்னையில் 1.2-ஆகவும், கொல்கத்தாவில் 0.56-ஆகவும் உள்ளது.
‘ஆா்’ மதிப்பு ஒன்றைவிடக் குறைந்தால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என சுகாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இது தொடா்பாக சென்னை ஐஐடி கணிதத் துறை இணைப் பேராசிரியா் ஜெயந்த் ஜா கூறுகையில், ‘‘மும்பை, கொல்கத்தா நகரங்களில் கரோனா தொற்று ஏற்கெனவே உச்சமடைந்துவிட்டதை ‘ஆா்’ மதிப்பு உணா்த்துகிறது. தில்லி, சென்னை நகரங்களில் இன்னும் கரோனா தொற்று பரவி வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) விதிகளை மாற்றியுள்ளதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். தற்போதைய ஆய்வின்படி கரோனா தொற்றின் 3-ஆவது அலை பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் உச்சமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...