"கூட்டணி இல்லையென்றாலும் அவர்கள் நண்பர்களே": பொடி வைத்து பேசும் சிதம்பரம்

கோவா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்றும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் என்றும் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

கோவாவில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கோவா பார்வர்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ், தேர்தலில் வெற்றிபெற கடும் பிரசாரம் மேற்கொண்டுவருகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, திரிணமூல் என அங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், "எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத - சிவசேனாவுக்கும் இடையே கூட்டணி அமைக்க முடியவில்லை" என அக்கட்சியின் மூத்த தலைவரும் கோவா தேர்தல் பொறுப்பாளருமான சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் தேர்தலுக்கு பிறகும் அவர்களுடன் நண்பர்களாகவே தொடர்வோம். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை காங்கிரஸ் தொடர்ந்து ஆராயும்" என்றார்.

மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக சாடிய அவர், "கூட்டணி அமைக்க முயற்சித்த போதிலும் காங்கிரஸ் தலைவர்களை தங்கள் கட்சியின் இணைக்க அவர்கள் முயற்சித்து வந்தனர். திரிணமூல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவும் வரவில்லை. 

எங்கள் தலைமை அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ முதல்வர் பெயரை கட்சி அறிவிக்குமா என்பது அனைத்து வேட்பாளர்களையும் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யப்படும்" என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com