முர்முவுக்கு ஆதரவாகப் பேசிய மம்தா: கேள்வி எழுப்பும் பாஜக

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, யஷ்வந்த் சின்ஹவை தூக்கி எறிவாரா என்று பாஜக கேள்வி எழுப்
முர்முவுக்கு ஆதரவாகப் பேசிய மம்தா: கேள்வி எழுப்பும் பாஜக
முர்முவுக்கு ஆதரவாகப் பேசிய மம்தா: கேள்வி எழுப்பும் பாஜக

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, யஷ்வந்த் சின்ஹவை தூக்கி எறிவாரா என்று பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளதால் குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி நேற்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதாவது, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, யஷ்வந்த் சின்ஹவை தூக்கி எறியப்போகிறது என்பதற்கான சமிக்ஞையா என்று கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக தொழில்நுட்பக் குழு தலைவர் அமித் மால்வியா தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பழங்குடியின மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டம் தோல்வியடைந்தது மற்றும் ஜனஜாதியா இனப் பெண்களை கைகளில் கையுறை அணிய வைத்து, இவர் அவர்களது கைகளைப் பிடித்தபடி புகைப்படம் போட்டது போன்றவை மூலம், மம்தா பானர்ஜியே தனது பழங்குடியினருக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை உணர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் யஷ்வந்த் சின்ஹவை தூக்கி எறிவாரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அப்படி என்ன சொல்லியிருந்தார் மம்தா பானர்ஜி?

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத யாத்திரை நிகழ்ச்சியின் போது செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் கூறியதாவது: திரௌபதி முா்முவை களமிறக்குவதற்கு முன்பு எதிா்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். முா்முவின் பெயரை அவா்கள் முன்னதாகவே கூறியிருந்தால், நாங்களும் (எதிா்க்கட்சிகள்) அதனைப் பரிசீலித்திருப்போம். நாங்களும் கூட பெண் வேட்பாளரை நிறுத்த பரிசீலித்தோம்.

இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுவது என்பது நாட்டுக்கு நல்லது. மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் முா்முவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா தீவிரம் காட்டினாா். சரத் பவாா், ஃபரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோா் தோ்தலில் போட்டியிட மறுத்த நிலையில், மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹ எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கினாா். முன்னதாக, இத்தோ்தலில் போட்டியிடுவதால் திரிணமூல் காங்கிரஸில் இருந்தும் அவா் விலகினாா். வரும் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com