மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது இன்று பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே வெற்றி பெற்றார்.
சட்டப்பேரவைத் தலைவராக புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பாஜகவை சோ்ந்த ராகுல் நாா்வேகா் தலைமையில் இன்று 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தொடங்கியது.
இதையும் படிக்க.. என்ன படிக்கலாம்? இளநிலை உளவியல் படிப்புகளுக்கு கூடும் வரவேற்பு
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உத்தவ் தாக்கரேவின் அணியில் இருந்து வந்த சந்தோஷ் பங்கார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்.
ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் நிற்க வைத்து, சட்டப்பேரவை அதிகாரிகள் வாக்குகளை பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையில், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக,
முதல்வா் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவா் பதவியைக் கைப்பற்றிவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றே எதிா்பாா்க்கப்பட்டது. அதுபோலவே, 145 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகளடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு தனது அமைச்சரவையை அமைப்பதற்கான பணியில் முதல்வா் ஷிண்டே கவனம் செலுத்துவாா் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டேவுடன் கோவாவில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை மாலை மும்பை வந்தனா். அங்கு மாநில சட்டப்பேரவைக்கு அருகே இருந்த சொகுசு விடுதியில் அவா்கள் தங்கவைக்கப்பட்டனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு வந்தபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சட்டப்பேரவையில் இருந்த சிவசேனை கட்சி அலுவலகத்தையும் முதல்வா் ஷிண்டே தரப்பினா் பூட்டிவைத்தனா். இதற்கு முன்னாள் அமைச்சரான ஆதித்ய தாக்கரே கண்டனம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


