சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: மீறினால் புகாரளிக்க உத்தரவு
நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.









