கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது : ஜெய்சங்கர்

கடந்த 8 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் கீழ் இந்தியா நிறைய மாற்றங்களை சந்தித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது : ஜெய்சங்கர்

கடந்த 8 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் கீழ் இந்தியா நிறைய மாற்றங்களை சந்தித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இளைஞர்களிடம்  உரையாற்றிய அவர் இதனை தெவிரித்தார். 

இந்த நிகழ்வில் இளைஞர்களிடம் அவர் பேசியதாவது: “ நான் இளமைக் காலத்தில் அனுபவித்தவையும், இன்று இளைஞர்கள் அனுபவிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பாக கரோனா பேராபத்து வந்திருந்தால் நாம், உலக நாடுகள் என்ன செய்கின்றன என்பதை பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு தடுப்பூசி கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருந்திருப்போம்.

ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நாம் நம்முடைய சொந்த தடுப்பூசிகளை தயாரித்து விட்டோம். மிகச் சில நாடுகளே தடுப்பூசி செலுத்துவதற்கான வசதியை செய்துத் தரும் செயலிகளை உருவாக்கியுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. தடுப்பூசி செலுத்துவதற்கான வசதி மட்டுமில்லாமல் தடுப்பூசி செலுத்தியதற்கான மின்னணு சான்றிதழையும் கோவின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இன்று இந்திய மிகப் பெரிய பிரச்னைகளுக்கு தீர்வினை அளிக்கும் இடத்தில் உள்ளது. ஆனால், நீங்கள் பார்க்கும் இந்தியாவிற்கும் என்னுடைய இளமைக் காலத்தில் இருந்த இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

இன்று, நாம் சவால்களை சந்திப்பதற்கும் அதற்கு தீர்வு கொடுப்பதற்கும் வேண்டிய திறன் நம்மிடம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் நிறைய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. பெண் குழந்தைகள் அதிக அளவில் பள்ளிக்குச் செல்கிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக வாழ மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. நாம் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்களின் திறமைகள் மேம்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் இந்தியாவில் பசி என்ற ஒன்று இல்லை. அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்களிடம் பணத் தட்டுப்பாடு இல்லை.” என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com