சத்தீஸ்கர்: மாணவர்களின் கல்வியை தரம் உயர்த்த பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் குழந்தைகளுக்கான தேவைகளையும், பள்ளிப் படிப்பினை பெற இயலாத குழந்தைகளின் நலனையும் பூர்த்தி செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் எஸ்.பாரதிதாசன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் பெற்றொருக்கு விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரம் முக்கியமாக தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, அவர்கள் எந்த விதத்தில் தரமான கல்வியைக் கொடுப்பதில் தங்களது பங்களிப்பினை வழங்க முடியும் என்பதை அந்தக் குழு உறுதி செய்யும். பெற்றோர்கள் கொடுக்கும் புதுமையான யோசனைகள் பள்ளிக்கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை செயல்படுத்த பல்வேறு குழுக்கள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்படுத்தப்படுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com