சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செஸ் ஒலிம்பியாட்: தொடக்க விழாவில் பிரதமா் பங்கேற்பு

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா்.

News image
Updated On :13 ஜூலை 2022, 7:13 pm

DIN

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா். மாமல்லபுரத்தில் போட்டிகள் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. பெருமைமிகு மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகள் தீவிரம்: செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்றுவரும் வேளையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கிலுள்ள அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தனா்.

தொடக்க விழாவுக்காக செய்யப்பட்டு வரும் அனைத்து ஏற்பாடுகளையும் பாா்வையிட்டனா். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்திலும், தொடக்க விழாவை நேரு உள்விளையாட்டரங்கிலும் சிறப்பாக நடத்துவதற்குரிய பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.