வாழுங்கள்.. வாழ விடுங்கள்: வயிற்றெரிச்சல்களுக்கு பதிலடி கொடுத்த லலித் மோடி

முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை லலித் மோடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த போது, பலருக்கும் கடுமையான ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிதான்.
வாழுங்கள்.. வாழ விடுங்கள்: வயிற்றெரிச்சல்களுக்கு பதிலடி கொடுத்த லலித் மோடி
வாழுங்கள்.. வாழ விடுங்கள்: வயிற்றெரிச்சல்களுக்கு பதிலடி கொடுத்த லலித் மோடி


முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை லலித் மோடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த போது, பலருக்கும் கடுமையான ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிதான்.

சுஷ்மிதா சென்னும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், முன்னாள் ஐபிஎல் நிர்வாகியும், தொழிலதிபருமான லலித் மோடியுடனான பழக்கம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை மௌனம் கலைத்திருந்தார்.

"நான் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன், திருமணமாகவில்லை. மோதிரங்கள் இல்லை. எந்த நிபந்தனையுமில்லாத அன்பினால் சூழப்பட்டிருக்கிறேன்" என்று தனது வளர்ப்பு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

சுஷ்மிதா சென் - லலித் மோடி நெருக்கம் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பல்வேறு கருத்துகளுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானது. அவரைப்பற்றிய செய்திகள் அதிகளவில் வெளியாகின. சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், லலித் மோடி, இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்டப் பதிவை போட்டுள்ளார். அதில், தான், சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியது முதல், இதுபற்றிய செய்திகளை ஊடகங்கள் வெறித்தனமாக டிரோல் செய்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். 

"யாராவது இதற்கு விளக்கம் கொடுக்க முடியுமா? நான் இரண்டே இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, டேக் செய்திருந்தேன், சரியா. இருவருக்குள் புரிதல் ஏற்பட்டு, நேரமும் நன்றாக இருந்தாலும் இரண்டு பேர் நண்பர்களாக இருக்க முடியாது என்று நினைக்கும் அந்த மத்தியக் காலத்தில்தான் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன், மேஜிக் எப்போதும் நடக்கலாம். இதுபோன்றவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால் வாழுங்கள். வாழ விடுங்கள்.. "என்பதே என்று குறிப்பிட்டுள்ளார்.

"என்னை பலரும் தப்பிடியோடிய என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று அறிவித்திருக்கிறது என்று சொல்லுங்கள்? எதுவும் இல்லை. நமது அழகிய தேசத்தில் நான் உருவாக்கியதைப் போன்றவற்றை உருவாக்கிய மற்றொரு நபர் யாராவது ஒருவரைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தியாவில் வணிகம் செய்வது என்பது எவ்வளவுப் பெரிய சிரமம் என்பதை அனைவருமே அறிவார்கள்.  2008ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கொண்டு வந்த போது எல்லோரும் சிரித்தார்கள். இப்போது யார் சிரிக்கிறார்கள். ஏனென்றால் எல்லோருக்குமே தெரியும், அதனை நான் தனியொருவனாகவே உருவாக்கினேன் என்று."

"என்னை தப்பியோடியவன் என்று நீங்கள் சொல்வது குறித்து நான் கவலையடைகிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் வைர ஸ்பூனுடன் பிறந்தவன். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை, அதற்குத் தேவையும் இல்லை. நான் பணத்தை வழங்கினேன். எடுத்துக் கொள்ளவில்லை."

"நீங்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார் லலித் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com