கடமையைச் செய்த டிஎஸ்பி மீது லாரி ஏற்றிக் கொலை

ஹரியாணாவில் சட்டவிரோத சுரங்கத்தை தடுக்கச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளரை லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

குருகிராம்: ஹரியாணாவில் சட்டவிரோத சுரங்கத்தை தடுக்கச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் மீது லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் அரவல்லி மலைப் பகுதியில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுப்பதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் டிஎஸ்பி சுரேந்திர் சிங் பிஸ்னாய் தலைமையில் காவலர்கள் விசாரணைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கற்களை ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்த காவலர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து காவலர்களை நோக்கி ஓட்டியுள்ளார்.

இதில், டிஎஸ்பி சுரேந்திர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த சக காவலர்கள் அருகில் குதித்ததால் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹரியாணா காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

“டிஎஸ்பி சுரேந்தர் சிங் இன்று பணியின் போது தனது உயிரிழந்தார். துணிச்சலான அதிகாரியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஹரியானா காவல்துறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. எந்தவித சமரசமுமின்றி குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.”

தொடர்ந்து, லாரி ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த காவல் கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு மொத்தம் ரூ. ஒரு கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com