ஜோத்பூரில் வெள்ளம்: ரயில்கள் ரத்து, பள்ளிகள் மூடல்

ஜோத்பூரில் பெய்த கனமழையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 
ஜோத்பூரில் வெள்ளம்: ரயில்கள் ரத்து, பள்ளிகள் மூடல்

ஜோத்பூரில் பெய்த கனமழையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 

ஜோத்பூரில் திங்கள்கிழமை தொடர்ந்து ஐந்து மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சில பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மிதந்தன. 

30-க்கும் மேற்பட்ட காலனிகள் வெள்ள நீரில் மூழ்கின. பல இடங்களில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் தண்டவாளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இரண்டு ரயில்களை நிர்வாகம் ரத்து செய்தது.

ஜோத்பூரில் பெய்த முதல் கனமழை இது என்று கூறப்படுகிறது. 
கடந்த 22 நாள்களில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 118மிமீ மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜோத்பூர் ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ராஜஸ்தானில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பில்வாராவில் அதிகபட்சமாக 205 மிமீ மழைப் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து சித்தூர்கர் 179 மிமீ மழையும், ஜோத்பூரில் 111 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com