'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சர்வாதிகாரத்தைப் பாருங்கள். இங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி விவாதிக்க முடியாது.
காவல்துறையையும், புலனாய்வு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்தி, எங்களைக் கைது செய்தாலும், ஒருபோதும் எங்களை அமைதிப்படுத்த முடியாது.
'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தில்லியில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!
முன்னதாக, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காலை பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட 50 எம்.பி.க்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

