சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
Published on

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஆதிர் ரஞ்சன் செளத்ரி மற்றும் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று பாஜகவினர் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, அவதூறு கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆதிர் ரஞ்சன் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்” என்று சோனியா காந்தி பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com