2020ஆம் ஆண்டில் மட்டும் பதிவான போக்சோ வழக்குகள் எத்தனை?

நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் மட்டும் பதிவான போக்சோ வழக்குகள்
2020ஆம் ஆண்டில் மட்டும் பதிவான போக்சோ வழக்குகள்


நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குற்றப் பதிவியல் ஆணையம் சேகரித்த தகவல்களை வெளியிட்டார்.

அதன்படி, 2020ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம்  6,898 வழக்குகளுடன் முதல் இடத்திலும், 5,687 வழக்குகளுடன் மகாராஷ்டிரம் 2வது இடத்திலும் மத்தியப் பிரதேசம் 5,648 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

அதேவேளையில், உத்தரப்பிரதேசத்தில் தண்டனை வழங்கப்பட்ட விகிதம் 70.7 சதவீதமாகவும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் முறையே 30.9 சதவீதம், 37.2 சதவீதமாகவும் இருக்கிறது.

நாட்டிலேயே மணிப்பூர் மாநிலம்தான், கடந்த மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 2020ஆம் ஆண்டு இறுதியில் இதுவரை பதிவான 1,70,000 போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இது 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 57 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com