திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

குடியரசுத் தலைவருடன் மொசாம்பிக் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மொசாம்பிக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் எஸ்பெராங்கா லாரிண்டா ஃபிரான்ஸிஸ்கோ நிஹியுவான் பியாஸ் தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்ற தூதுக்குழுவினர்,

News image
Updated On :29 ஜூலை 2022, 3:48 pm

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மொசாம்பிக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் எஸ்பெராங்கா லாரிண்டா ஃபிரான்ஸிஸ்கோ நிஹியுவான் பியாஸ் தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்ற தூதுக்குழுவினர், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினர்.

வெளிநாட்டு தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 25 ஆம் தேதி தாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் சர்வதேச தூதுக்குழுவினராக மொசாம்பிக் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். 

இருநாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான பரஸ்பர பயணங்களுடன், இந்தியாவும், மொசாம்பிக்கும் நெருங்கிய நட்புறவை கொண்ட நாடுகளாக திகழ்வதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், முக்கிய கூட்டாளியாக மொசாம்பிக் உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 

மொசாம்பிக் நாட்டின் இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கத் துறைகளில் இந்திய நிறுவனங்கள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். மொசாம்பிக்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.