பொம்மைகள் ஏற்றுமதியில் இந்தியா முன்னோடி: பிரதமர் மோடி

பொம்மைகள் ஏற்றுமதியில் இந்தியா முன்னோடியாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
பொம்மைகள் ஏற்றுமதியில் இந்தியா முன்னோடி: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

பொம்மைகள் ஏற்றுமதியில் இந்தியா முன்னோடியாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதே அதற்கு சான்று எனவும் குறிப்பிட்டார். 

மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, பொம்மைகள் உற்பத்தியில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதிபலிக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 70 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது 2 ஆரயித்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. 

சமீபத்தில் 300 முதல் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

இந்த உற்பத்தி அனைத்தும் கரோனா பொதுமுடக்க காலத்தில் செய்யப்பட்டவைதான். இந்தியாவின் கலாசாரம், வரலாறு போன்றவற்றை பொம்மைகள் மூலம் உற்பத்தியாளர்கள் பறைசாற்றி வருகின்றனர். சிறு தொழில் முனைவோர்கள் பொம்மைகள் உற்பத்தி மூலம் மிகுந்த பலனடைந்துள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்த பொம்மைகளே தற்போது உலகம் முழுவதும் செல்கிறது.   
    
பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு இளைஞர் வாஞ்சிநாதன் தண்டனை வழங்கிய இடம் மணியாச்சி. சுதந்திர போராட்டத்தில் இந்திய ரயில்வே பங்களிப்பை அறிய வேண்டும் 

சுதந்திரம் பெறுவதற்கான அவர்கள் உழைத்தது அதிகம். சுதந்திரம் அடையவில்லை எனில், வந்தே மாதரம் என்ற முழக்கத்தை முழங்கியபடியே நமது நாள்கள் நகர்ந்திருக்கும். 

சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவத்தில் உலகம் முழுக்க வரவேற்பு அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com