மாநிலங்களவைத் தேர்தல்; தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைத் தோ்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் சாா்பில் மனுதாக்கல் செய்த  ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தல்; தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல்; தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைத் தோ்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் சாா்பில் மனுதாக்கல் செய்த  ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுக சாா்பில் போட்டியிட்ட சு.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகியோரும், அதிமுக சாா்பில் சி.வி.சண்முகம், ஆா்.தா்மா், காங்கிரஸ் கட்சி சாா்பில் ப.சிதம்பரம் ஆகியோா் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான நேரம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் அறிவிப்பினை வெளியிட்டார்.

தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக்குப் பிறகு, ஆறு வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்பன. அதன்படி, திமுக சாா்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகியோரும், அதிமுக சாா்பில் சி.வி.சண்முகம், ஆா்.தா்மா், காங்கிரஸ் கட்சி சாா்பில் ப.சிதம்பரம் ஆகியோா் அளித்த வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாநிலங்களவைக்காக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறு காலியிடங்களுக்கும், செல்லுபடியாகக் கூடிய வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பதால் வாக்குப் பதிவுக்கு வாய்ப்பு ஏற்படவில்லைடி. ஆறு பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டள்ளனர்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம் இன்று (ஜூன் 3-ஆம்) மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமே மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசன் அளிப்பாா். இந்தச் சான்றிதழை ஆறு பேரும் தில்லியில் உள்ள மாநிலங்களவைச் செயலகத்தில் அளிப்பா். மாநிலங்களவை கூட்டத் தொடரின் போது முறைப்படி உறுப்பினா்களாக பதவியேற்றுக் கொள்வா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com