பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் நான்கு முன்னாள் அமைச்சர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
சமீப காலங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு பிரமுகர்களும் பாஜகவில் இணைந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனர்.
இதையும் படிக்க | ‘விரைவில் இ-டிராக்டரை அறிமுகப்படுத்துவேன்’: நிதின் கட்கரி
சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான ராஜ் குமார் வெர்கா, பல்பீர் சிங் சித்து, குர்ப்ரீத் சிங் கங்கர், மற்றும் சுந்தர் சாம் அரோரா ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
மேலும் காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான பர்நாலா கேவல் சிங் தில்லோன் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான சரூப் சந்த் சிங்லா மற்றும் கெளர் ஜோஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
இதையும் படிக்க | துருக்கி நிராகரித்த கோதுமையை கைமாற்றிவிட்ட இந்தியா
ஏற்கெனவே அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்திருந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்ட நிலையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை


