அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலை பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

News image

முதல்வர் ஸ்டாலின் - படம்: திமுக ஐடி விங்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:31 pm IST

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

”திருவண்ணாமலையையும் தீபத்தையும் பிரிக்க முடியுமா? அதேபோல என்னையும் திருவண்ணாமலையையும் யாராலும் பிரிக்க முடியாது.

நினைத்தாலே முக்தி தரும் ஊராக ஆன்மிக அன்பர்களால் போற்றக்கூடிய திருவண்ணாமலைக்கு வந்துள்ளேன். திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வழக்கமாக கிரிவலம் வருகிறார்களோ, இல்லையோ, இந்த ஸ்டாலின் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வலம் வருகிறேன்.

2021 தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது திருவண்ணாமலைதான். திருவண்ணாமலை என்றாலே திமுக மலை என்ற அளவுக்கு திமுகவின் கோட்டையாக உள்ளது. திருவண்ணாமலையை தனி மாவட்டமாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. தற்போது திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இருக்கிறோம்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் ஸ்டாலின் முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படும். முடிந்தால் பழனிசாமி தடுத்துப் பார்க்கட்டும். திருவள்ளூர் மீது காவி சாயம் பூசினார்கள், அதை எதிர்த்து பழனிசாமி பேசினாரா?, தொடர்ந்து எம்ஜிஆர் மீதும் காவி சாயம் ஊற்றுவதற்கு சங்கி களவர கும்பல் இறங்கிட்டாங்க.

ஹிந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு பூசணிக்காய் அளவுக்கு நிதி ஒதுக்கிறார்கள். ஆனால், தமிழுக்கு பட்டாணி அளவுக்குகூட ஒதுக்கமாட்டார். இந்த துரோகத்தை எதிர்த்து பழனிசாமி பேசமாட்டார்” என்றார்.

Summary

Chief Minister Stalin has stated that the very mention of 'Thiruvannamalai' signifies the 'DMK Mountain'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.