யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜெயின் வீட்டு ரெய்டு: பணம், தங்கக் காசுகள் பறிமுதல்

தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை இன்று தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூன் 2022, 11:48 am

DIN


தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொடர்புகள் கிடைத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேலும் தகவல்களைத் திரட்ட தில்லியில் சத்யேந்தர் ஜெயின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை நடத்தியது.

இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணம் மற்றும் தங்கக் காசுகளுக்கான காரணம் குறித்து விளக்கப்படவில்லை என்றும் இவை ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அமலாக்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.