
பிரமோத் சாவந்த்
தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கரோனா நிபுணர் குழு மற்றும் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும். மேலும், நெறிமுறைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் கரோனா நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்றார்.
இதையும் படிக்க: உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி மூலம் சிகிச்சை அளிக்குமாறு நிபுணர் குழு புதன்கிழமை மக்களை வலியுறுத்தியது.
12 முதல் 14 வயதுக்கும், 15 முதல் 17 வயதுக்கும் உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் நிறைவடையும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இதுவரை 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 66.25 சதவீத மாணவர்கள் முதல் டோஸ் பெற்றுள்ளனர். 48.37 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் சதவீதம் முறையே 93.68 மற்றும் 80.58 செலுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.