உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தார். 
உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

உயிரி தொழில்நுட்ப கண்காட்சி ஜூன் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. பயோடெக்னாலஜி மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (BIRAC) துறையால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பயோ-இன்குபேட்டர்கள், உற்பத்தியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்களை இணைக்கும் தளமாக இந்த கண்காட்சி செயல்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கண்காட்சியில் சுமார் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், மரபியல், உயிரியல் மருந்து, விவசாயம், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், கழிவு-மதிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயிரி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com