அரசை எதிர்த்து கேள்வி எழுப்புவதால் ராகுலைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவதால் ராகுல் காந்தியைப் பார்த்து பாஜக பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 
அரசை எதிர்த்து கேள்வி எழுப்புவதால் ராகுலைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவதால் ராகுல் காந்தியைப் பார்த்து பாஜக பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று முதல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும்  இன்று தொடர்ந்து 2-வது நாளாக ராகுல் காந்தி ஆஜராகிறார். 

இன்று தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் மத்திய பாஜக அரசு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அதனால் அவரைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது. ராகுல் காந்தியின் வலுவான குரலுக்கு பாஜக ஏன் பயப்படுகிறது? அரசு மறுப்பு தெரிவித்தும்கூட சீன ஊடுருவல் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். 

மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதால்தான் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com