அக்னிபத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு.. நிபுணர்கள் எச்சரிக்கை

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை உரிய ஆய்வுகளுக்குப் பின், சோதனை முறையில் செய்த பிறகே முழு வீச்சில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் கருத்
அக்னிபத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு.. நிபுணர்கள் எச்சரிக்கை
அக்னிபத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு.. நிபுணர்கள் எச்சரிக்கை

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை உரிய ஆய்வுகளுக்குப் பின், சோதனை முறையில் செய்த பிறகே முழு வீச்சில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் கருத்துதெரிவித்துள்ளனர்.

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாடியா (ஓய்வு) இந்த திட்டத்தை, ராணுவப் படைக்கு அடிக்கும் சாவுமணி என்கிறார். இந்தத் திட்டத்துக்கு முன்னோடித் திட்டங்கள் இதுவரை எதுவும் இல்லை. எனவே, இதனை நடைமுறைப்படுத்தி, அலசி கவனமுடன் ஆராய்ந்து, குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்ட வர வேண்டும் என்கிறார்.

இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், இதில் அதிதீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கிறார். 

நாட்டின் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திட்டம் குறித்து பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துகளையும் எச்சரிக்கை தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ராணுவத்துக்கு செலவிடும் ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றின் செலவினத்தைக் குறைக்கும் வகையில், முப்படைகளுக்கு புதிய பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் பெண்கள் உள்பட 46,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ராணுவமயமாக்கும் முயற்சியாகக் கூட இது இருக்கலாம். கிட்டத்தட்ட 40 ஆயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்னிபத் திட்டத்திலிருந்து வெளியேறி, ராணுவத்தின் பாதி பயிற்சிகளுடன் இந்த சமூகத்துக்குள் நுழைவார்கள். இது நல்ல யோசனை அல்ல, இதனால் யாருக்கும் பயன் கிடைக்காது என்றும் பாட்டியா குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்த திட்டத்தால் இளைஞர்களம், முப்படைகளும் பயனடையும் என்றும், இந்தப் பணி அனுபவம் முடித்துத் திரும்புவோர், தொழில்நுட்பத்தில் சிறந்த ஆயுதங்களை இயக்கும் பயிற்சி பெற்றிருப்பார்கள். எதிர்காலத்தில் நடக்கும் போர்களின்போது இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்களும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவார்கள் என்கிறார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com