விமான எரிபொருள் விலை 16% உயா்வு; விமானக் கட்டணங்கள் உயரும் அபாயம்?

விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 16 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.  இது சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலையை கடுமையாக பாதித்துள்ளது.
விமான எரிபொருள் விலை 16% உயா்வு; புதிய உச்சம் தொட்டது
விமான எரிபொருள் விலை 16% உயா்வு; புதிய உச்சம் தொட்டது

விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 16 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.  இது சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலையை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த விலை மாற்றம் காரணமாக தலைநகா் தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.19,757.13 உயா்ந்து இனி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளானது ரூ 1,41,232.87-க்கு விற்பனையாகிறது. 

இதன் காரணமாக, விமானக் கட்டணங்கள் விலை விரைவில் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், விமான எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ஆம் தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

விமான எரிபொருள் விலையானது, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அதன் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ. 17,135.63 உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2 சதவீத அளவுக்கும், ஏப்ரல் 16-ஆம் தேதி 0.2 சதவீதமும், மே 1-ஆம் தேதி 3.2 சதவீத அளவுக்கும் உயா்த்தப்பட்டது. மே 16ஆம் தேதி 5.3 சதவீதம் உயா்த்தப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் விமான எரிபொருள் விலையானது ஒரு கிலோ லிட்டருக்கு 1.3 சதவீதம் (1,563.947 ரூபாய்) குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் 16ஆம் தேதி மீண்டும் கடுமையான உயர்வை அதாவது 16 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி நடந்த விலைக்குறைப்பு என்பது, கடந்த 10 முறைகளில் நடந்த விலையேற்றத்துக்குப் பிறகு நடந்ததும், விலைக் குறைப்பைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருப்பதும் விமான நிறுவனங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான செலவு கணிசமாக அதிகரிக்கும்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, சா்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயா்ந்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் மும்பையில் தற்போது ரூ. 1,40,092.74 என்ற அளவிலும், கொல்கத்தாவில் ரூ. 1,46,322.23 என்ற அளவிலும், சென்னையில் ரூ. 1,46,322.23-க்கும் விற்பனையாகிறது. உள்ளூா் வரி மாறுபடுவதன் காரணமாக இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com