
பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீவைத்துக் கொளுத்தப்பட்ட ரயில்
பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் ரயிலுக்குத் தீ வைத்தனர்.
4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பெரும்பாலான மாவட்டங்களில் ரயில்களுக்குத் தீ வைத்தனர். இதனால் ரயில் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் சம்பர்க்கிராந்தி ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

அதுபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பலியாவில் ஒரு ரயிலுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் ரயில் முழுவதும் எரிந்தது.
.jpg)
பிகாரில் இன்று மேலும் இரு ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் வடமாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த போராட்டத்தினால் நாடு முழுவதுமே பதற்ற சூழல் நிலவுகிறது.
‘அக்னிபத்’ திட்டத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு: ரயில்கள் எரிப்பு; பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...