20 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்: குஜராத் அதிகாரிகள்

பாகிஸ்தான் கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் வருகிற ஜூன் 20ஆம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தான் கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் வருகிற ஜூன் 20ஆம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மீன்வளத் துறை இயக்குநர் நிதின் சங்வான் கூறியதாவது, “ எங்களுக்கு பாகிஸ்தான் சிறை நிர்வாகத்திடம் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் வருகிற ஜூன் 20 அன்று இந்திய அதிகாரிகளிடம் பஞ்சாபில் உள்ள வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த மீனவர்கள் அனைவரும் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்” எனக் கூறினார்.

சமீபத்தில் குஜராத் சட்டப்பேரவையில் அறிவித்த தகவலின்படி, கிட்டத்தட்ட குஜராத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்களில் 358 மீனவர்கள் பாகிஸ்தான் அரசினால் கடந்த 2 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் பாகிஸ்தான் அரசினால் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் அரபிக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைந்ததாக் கூறி கைது செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com