அக்னிபத் திட்டம் எப்போது தொடங்கும்? ராணுவ தளபதி தகவல்

அக்னிபத் திட்டம் வரும் டிசம்பரில் தொடங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டம் எப்போது தொடங்கும்? ராணுவ தளபதி தகவல்
அக்னிபத் திட்டம் எப்போது தொடங்கும்? ராணுவ தளபதி தகவல்


புது தில்லி: அக்னிபத் திட்டம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடாத நிலையில், அக்னிபத் திட்டம் வரும் டிசம்பரில் தொடங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், அக்னிபத் திட்டத்தின் கீழ்  தேர்வாகும் முதல் பிரிவு அக்னிவீரர்களுக்கு டிசம்பர், 2022ல் தொடங்கும் என்றும், அவர்கள் 2023ஆம் ஆண்டு மத்தியில் பணியில் இணைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெனரல் மனோஜ் பாண்டே, அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் வெகு விரைவில் தொடங்கும். இது தொடர்பான அரசாணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரண்டொரு நாள்களில் வெளியிடப்படும். அதன்பிறகு, நமது ராணுவம், ஆள்சேர்ப்புக்கான பணிகளைத் தொடங்கி, அதற்கான முன்பதிவு உள்ளிட்டவற்றை அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமையும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது.

பல மாநிலங்களில்  போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ரயில்கள் மற்றும் பேருந்துகளுக்கு தீவைப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com