லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கர்நாடக முன்னாள் அமைச்சர் எம்.ரகுபதி காலமானார்

ஜனதா பரிவார் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சருமான எம்.ரகுபதி இன்று காலமானார். 

News image
Updated On :18 ஜூன் 2022, 9:53 am

DIN

ஜனதா பரிவார் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சருமான எம்.ரகுபதி இன்று காலமானார். 

ஜனதா பரிவார் கட்சியின் மூத்த தலைவர் எம்.ரகுபதி. இவர், ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்த நிலையில் எம்.ரகுபதி மல்லேஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். 

ரகுபதி மறைவுக்கு கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.ரகுபதியில் உடல் மல்லேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த எம்.ரகுபதி ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.