சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி நீக்கம்: சிவசேனை அதிரடி

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவசேனை நீக்கியுள்ளது. 
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவசேனை நீக்கியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  

இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனை கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதன்' காரணமாக உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இதன் பின்புலத்தில் பாஜக இருப்பதாக ஆளும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனை நீக்கியுள்ளது. 

சிவசேனை எம்எல்ஏ அஜய் சௌத்ரியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நியமித்து அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com