மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவு வாபஸ்: அதிருப்தி எம்எல்ஏக்கள்

மகராஷ்டிரத்தில் சிவேசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்பப்பெறப்படுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவு வாபஸ்: அதிருப்தி எம்எல்ஏக்கள்
மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவு வாபஸ்: அதிருப்தி எம்எல்ஏக்கள்

மகராஷ்டிரத்தில் சிவேசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்பப்பெறப்படுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவா் அனுப்பிய தகுதிநீக்க நோட்டீஸை எதிா்த்து சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில், மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் சிவசேனை - காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களில் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் அவைத் தலைவர் அனுப்பியருந்த நிலையில், அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தலைமையில் 38 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப்பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மேலும், மகாராஷ்டிர அரசு பெரும்பான்மை இழந்ததாகவும் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தினார். தற்போது அசாமின் குவகாத்தி நகரில் முகாமிட்டுளள அவருடன் சிவசேனையைச் சோ்ந்த எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் உள்ளனா்.

தனக்கு 37 சிவசேனை எம்எல்ஏக்கள் மற்றும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறாா். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென்பதே அவா்களின் பிரதான கோரிக்கை.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களில் ஷிண்டே உள்பட 16 பேரை ஏன் தகுதிநீக்கம் செய்யக் கூடாது எனக் கூறி பேரவை துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

சிவசேனை தலைமைக் கொறடா சுனில் பிரபு பேரவை துணைத் தலைவரிடம் அளித்த கடிதத்தின் அடிப்படையில், அவா்களுக்கு சட்டப்பேரவை முதன்மைச் செயலா் ராஜேந்திர பகவத் இந்த நோட்டீஸை அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸுக்கு திங்கள்கிழமை (ஜூன் 27) மாலை 5.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஞாயிறுக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதிநீக்க மனுவுக்கு எதிராக பேரவை துணைத் தலைவா் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமா்வு இன்று விசாரணைக்கு ஏற்றது. விசாரணையின்போது, மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஓா் அமைச்சா்: சிவசேனை சாா்பில் மகாராஷ்டிர உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த உதய் சாமந்த், குவாஹாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அதிருப்தி அணியுடன் இணைந்தாா்.

இப்போதைய நிலையில் முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மட்டுமே முதல்வருக்கு ஆதரவாக உள்ள ஒரே அமைச்சா் ஆவாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com