

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டிலுள்ள கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து, கடந்த 23ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மத்திய அமைச்சர் நடத்திய உயர் மட்ட ஆலோசனையின்போது, நாட்டில் கரோனா பரவலைத் தீவிரமாக கண்காணிக்கவும், முதியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கடந்த இரு வாரங்களாக நாட்டில் கரோனா பரவல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஹரியாணா, தில்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.
மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரை கண்காணிக்கவும் அறிவுறுத்திய மத்திய அமைச்சர், பயணங்களை முடித்து வருபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.