
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் நடந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், சுமார் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாம்: இனி எனக்கு ஏன் விளம்பரம்? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதிலடி
நோனி துணை ஆணையர் வெளியிட்டுள்ள தகவலில்,
துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் அணை உடைந்துள்ளதால் நோனி மாவட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.