
தையல்காரர் கன்னையா லாலின் கொடூரமான கொலைக்கு எதிராக உதய்பூரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகொலையில் தொடர்புடைய கௌஸ் மொஹம்மது மற்றும் ரியாஸ் ஜப்பர் ஆகிய இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாம்: இனி எனக்கு ஏன் விளம்பரம்? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதிலடி
இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் சர்வ ஹிந்து சமாஜ் பேரணி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் டவுன்ஹால் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை அமைதியாக நடைபெற்றது.
பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஊர்வலம் செல்லும் வழியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கூடுதல் துணை ஆணையர் எம்.என்.தினேஷ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G