கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளுங்கள்’: ராகுல் சொல்லும் காரணம் என்ன?

மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி வைத்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி வைத்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மணிப்பூரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தன்னுடைய சுட்டுரைப் பதிவில், “மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவடைய உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் மட்டும் மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை மேற்கொள்வதில்லை என ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தேர்தலுக்கு பின் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை அமல்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் ராகுல்காந்தி இத்தகைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.