புதுதில்லி: ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அதேநேரத்தில் அரசியல் சாசனத்தில் அதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கையை கொண்டு வருவது நல்ல யோசனை தான், ஆனால், இந்த மாற்றத்திற்கு கால அவகாசம் தேவைப்படும், அதை அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கோரப்பட்டால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யத் தயாராக உள்ளது மற்றும் அதற்கான திறனுடையதாக தேர்தல் ஆணையம் உள்ளது என்று மீண்டும் உறுதிப்படுத்தியவர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். அனைத்து தேர்தல்களையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று சுஷில் சந்திரா கூறினார்.
மேலும் ஐந்து மாநிலங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது தேர்தல் ஆணையம், நாட்டில் தற்போது நிலவும் கரோனா நோய்தொற்று பரவலை மனதில் கொண்டு, அரசியல் பேரணிகள் மற்றும் பாதயாத்திரைகள் எதுவும் அனுமதிக்கப்படாததால், தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் காணப்பட்டது என்றும், இது கடினமான முடிவு என்றாலும், வாக்காளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் முடிவை களத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றதாகவும், வாக்களிப்பும், வாக்காளரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கருத்து," என்று சுஷில் சந்திரா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

தாத்தாவான துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: தேஜஸ்வி சூர்யா வாழ்த்து!

ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


