கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உத்தரகண்ட் வாக்கு எண்ணிக்கை நிறைவு: 47 இடங்களில் பாஜக வெற்றி

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:40 pm

DIN

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது. 

பஞ்சாப், கோவா, மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் தற்போது, உத்தரகண்டிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 

உத்தரகண்டில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக மீண்டும் உத்தரகண்டில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும், சுயேட்சை இரண்டு இடங்களிலும் வென்றுள்ளனர். 

தேர்தல் ஆணைய தரவுகளின்படி உத்தரகண்டில் பாஜக 44.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37.9 சதவிகித வாக்குகளையும், மற்றவை 8.3 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 4.82 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.