காங்கிரஸ் தலைவராகிறாரா முகுல் வாஸ்னிக்?

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் மாலை கூடவுள்ள நிலையில், கட்சியின் அடுத்த தலைவராக முகுல் வாஸ்னிக் பெயரை ஜி23 தலைவர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம்: பேஸ்புக்
படம்: பேஸ்புக்


காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் மாலை கூடவுள்ள நிலையில், கட்சியின் அடுத்த தலைவராக முகுல் வாஸ்னிக் பெயரை ஜி23 தலைவர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, கட்சியின் செயற்குழுக் கூட்டம் மாலை 4 மணிக்கு கூடுகிறது.

இந்த நிலையில், ஜி23 தலைவர்கள் கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஜி23 தலைவர்களில் ஒருவர் கூறியதாவது:

"கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரைப் பரிந்துரைத்தோம். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2000-வது தொடக்கத்தில் சோனியா காந்தி எப்படி கட்சியை வழிநடத்தினாரோ, அதுபோல புதிய தலைவர் கட்சியை வழிநடத்த வேண்டும். சோனியா காந்தி இடைக்காலத் தலைவர் என்பதால், கேசி வேணுகோபால், அஜய் மாக்கென் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோராலே கட்சி நடத்தப்படுகிறது.

ராகுல் காந்தி தலைவர் கிடையாது. ஆனால், அவர் பின்னின்று வழிநடத்தி முடிவெடுக்கிறார். அவர் வெளிப்படையாக அறிவிக்கமாட்டார். நாங்கள் கட்சியின் நலன் விரும்பிகள், எதிரிகள் அல்ல."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com