பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் அமெரிக்காவிலிருந்து வந்து பங்கேற்ற மகள்-மகன்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது மகனும் மகளும் அமெரிக்காவிலிருந்து வந்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் அமெரிக்காவிலிருந்து வந்து பங்கேற்ற மகள்-மகன்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது மகனும் மகளும் அமெரிக்காவிலிருந்து வந்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பகவந்த் மானின் மகள் சீரத் கெளர் மான் (21), மகன் தில்ஷான் மான் (17) ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்து பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வந்தனர். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் களானில் இன்று (மார்ச் 16) பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், பகவந்த் மான் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்காவிலிருந்த அவரது மகனும், மகளும் கலந்துகொண்டனர். பகவந்த் மான் அவரது மனைவி இந்தர் பிரீத் கெளரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

மகன் சீரத் கெளர் மானும், மகள் தில்ஷான் மானும் அமெரிக்காவில் அவரது தாயுடன் வளர்ந்து அங்கேயே கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அவர் மனைவி இந்தர் பிரீத் கெளர் அளித்துள்ள பேட்டியில், எனது இரு குழந்தைகளும் பகவந்த் மான் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவிற்கு சென்றுள்ளனர். அவரால் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அவருடைய வெற்றிக்காக என்றுமே நான் பின்புறமிருந்து கடினமாக உழைத்திருக்கிறேன். நான் ஒருபோதும் அவரைப் பற்றி தவறாக எவரிடமும் கூறியதில்லை. என்னுடைய பிரார்த்தனைகளில் அவர் என்றுமே இருந்துள்ளார். அது இன்னும் தொடரும். நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், அவரது நலனில் நான் என்றுமே அக்கறை கொண்டுள்ளேன் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com