
கேரள மாநிலம் களமசேரியில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
கேரள மாநிலம் களமசேரியில் உள்ள எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் 2.45 மணியளவில் பெரிய குழி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் யார்? சோனியாவை சந்தித்த குலாம்நபி ஆசாத்
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்களான குடுஸ் மண்டல், நுராமின் மண்டல், ஃபைஜுலா மண்டல் மற்றும் நஜீஷ் அலி ஆஜிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கொச்சி நகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பஞ்சாப் அமைச்சரவை நாளை பதவியேற்பு
மொத்தம் 25 பேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் 7 பேர் மண் சரிவில் சிக்கியதாகவும் அவர்களில் இருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்ததாகவும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...