
குலாம்நபி ஆசாத்
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில் அக்கட்சிக்குள் அரசியல் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிக்க | பஞ்சாப் அமைச்சரவை நாளை பதவியேற்பு
கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், சோனியா காந்தி அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தில்லியில் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க | திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “5 மாநிலங்களில் தோல்விக்கான காரணங்கள் குறித்து செயற்குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும் , “சோனியா காந்தியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவர் தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர். இதுதொடர்பாக எங்களிடம் சில கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன” எனவும் குலாம்நபி ஆசாத் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...