
நாட்டில் இதுவரை 181.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 12 முதல் 14 வயதுள்ள சிறார்களுக்கு இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 52,10,775 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம்1,81,89,15,234 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்
நாட்டில் தற்போது 23,087 பேர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,542 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,73,057 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,778 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் ஒரேநாளில் 6,77,218 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மொத்தம் இதுவரை 78,42,90,846 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.