122 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்: ஏப்ரல் மாதத்தில் இந்தியா..

இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் சராசரி வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
122 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்: ஏப்ரல் மாதத்தில் இந்தியா..

இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் சராசரி வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முழுக்க சராசரியாக 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் பதிவாகியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபடியான சராசரி வெப்பநிலை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கோடை காலம் தொடங்கியதன் விளைவாக கடந்த மார்ச் மாத தொடக்கம் முதலே குளிரின் அளவு குறைந்து வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. கோடை காலம் தொடங்கியதும், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கடந்த வாரம் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. ஹரியாணா மாநிலம், குருகிராமில் இதுவரை இல்லாத அளவில் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 1979, ஏப்ரல் 28-இல் 44.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

இதேபோல், தில்லி, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ், மத்திய பிரதேச மாநிலத்தின், கஜூராஹோ, நெளகாங், காா்கோன் நகரங்களிலும் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. 

மகாராஷ்டிரத்தின் அகோலா, பிரம்மபுரி, ஜால்கோன், ஜாா்க்கண்ட் மாநிலம் தல்டோன்கஞ்ச் உள்ளிட்ட நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதா்பா பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபடியான சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரை சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு 35.4 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. அதற்கு முன்பு 1973ஆம் ஆண்டு 37.75 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. 

காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com