இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 25% உயர்ந்துள்ளதாக புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கிறது.
இந்தியாவில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 1,3771 மில்லியன் டாலர்களாக உள்ளது என்று புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் 42.42 சதவீதம் (ஏப்ரல்-செப்டம்பர் 2022) குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்தது. அதே நேரத்தில் புதிய பழங்கள் முந்தைய ஆண்டின் மாதங்களுடன் ஒப்பிடும்போது 4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருள்கள் கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 29.36 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆறு மாதங்களில் இறைச்சி, பால் மற்றும் கோழி தீவனப் பொருள்களின் ஏற்றுமதி 10.29 சதவீதமும், மற்ற தானியங்களின் ஏற்றுமதி 12.29 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கோழி தீவனப் பொருள்களி்ல் மட்டும் 83 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு!
பிற தானியங்களின் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் 2021 இல் 467 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, ஏப்ரல்-செப்டம்பர் 2022 இல் 525 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது மற்றும் கால்நடைப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் 2021 இல் 1,903 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஏப்ரல்-2092 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!

சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் சந்திப்பு!

காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது; விரைவில் வருந்தும்! திமுக செய்தித் தொடர்பாளர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

